cathch the god's hand ..tamil..பற்றுக பற்றற்றான் பற்றினை
மனிதன் தன் மனத்தால் எல்லாவற்றையும் பற்றிக்கொள்கிறான். பற்றுதல் குறையும்போது மனம் நிம்மதி அடையும். பற்றற்று இருப்பது எப்படி என ஒருவன் விடா முயற்சியாலும் அனுபவத்தாலும் கற்றுக்கொள்ள முடியும். பற்றுக பற்றற்றான் பற்றினை என்றான் வள்ளுவன். பற்றற்றான் யார்?. எல்லாவற்றையும் படைத்து விட்டு தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் உட்கார்ந்திருக்கிறான் அல்லவா, அவன்தான். அவனை பற்றுங்கள். வழி காட்டுவான்.
Advertising